திட்டத்தின் நோக்கங்கள்
சமூக ஊடகம் என்றால் என்ன? இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எவ்வாறு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்? மக்களின் வாழ்வில் சமூக ஊடகங்கள் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன?
இந்த வலைத்தளத்தில் நீங்கள் எங்கள் கண்டுபிடிப்புகள் சிலவற்றை பற்றி அறிய முடியும் ஆய்வு தளங்கள் மற்றும் ஆராய்ச்சி பங்கேற்பாளர்கள் பற்றியும் கதைகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் ஆராயலாம். நீங்கள் எங்கள் பாடத்திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம், எங்கள் புத்தகங்களைப் படிக்கலாம், இரண்டும் ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கின்றன.
குறிப்பாக எங்களது ஒப்பீடுப் புத்தகமான 'உலகால் சமூக ஊடகங்கள் எவ்வாறு மாற்றப் பட்டுள்ளன' என்ற புத்தகத்தை படிக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். இந்த புத்தகம் எங்கள் ஆய்வுகளங்களில் பாலினம், கல்வி, வணிகம், அரசியல் காட்சி தொடர்பு, மற்றும் இன்னும் பல தலைப்புகளில் நாங்கள் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைச் சுருக்கமாகக் கொண்டுள்ளது.