
இவை தளங்கள்தானா?
பதின்மர்களின் வாதங்கள் அல்லது கிசுகிசுக்கள் போன்ற சமூக ஊடகங்களின் உள்ளடக்கங்கள் தளங்களுக்கு நடுவே, அதாவது பிபிஎம் இல் இருந்து பேஸ்புக் மூலம் ட்விட்டர் அல்லது ஆர்குட்டிலிருந்து ஃபேஸ்புக், மிகவும் எளிதாக பரவுகின்றன. ஒரே தளத்தை முற்றிலும் வேறு வகையான உள்ளடக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். ஆகையால் தளங்கள் என்பது உள்ளடக்கங்கள் வெளியிடப்படும் இடங்கள், ஆனால் அவைகள் என்ன, ஏன் வெளியிடப்படுகின்றன என்பதை விவரிப்பதில் மிகவும் சிறிய பங்கே வகிக்கின்றன.
நம்மால் சமூக ஊடகத்தை வரையறுக்க முடியுமா?
சமூக ஊடகம் என்றால் என்ன என்ற வரையறையை எங்களது ஒரு ஆய்வு திட்டமான 'அளவிடக்கூடிய சமுதாயக் குணங்கள்' இல் கொடுத்துள்ளோம், பல்வேறு சாத்தியமான வரையறைகளில் இது ஒன்றேயாகும். மானுடவியலாளர்கள், சமுதாயக் குணங்களில் ஆர்வமாக உள்ளனர். அதாவது சமூகத்தில் மக்கள் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதில். முன்பு ஊடகங்கள் தனியார் வசப்பட்டதாகவோ அல்லது முழுவதும் பொதுத்துறையுடையதாகவோ இருந்தன என மானுடவியலாளரான நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால் சமூக ஊடகங்களின் தளங்கள் இரண்டுக்கும் இடையே உள்ள இடத்தை ஆக்கிரமிக்கின்றன.. பிற சம்பந்தமுடைய மற்ற துறைகளுக்கு வேறு வரையறைகள் உண்டு.
சமூக ஊடகம் என்பது என்ன என்று முடிவு செய்வது நாங்கள் அல்ல, இறுதியில் நீங்கள் தான்
நாம் 'சமூக ஊடகம்' என்ற பதத்தை தேர்வு செய்ய வில்லை, அல்லது அதற்கு முன் 'சமூக வலைப்பின்னல் தளங்கள்' என்பதை. ஆனால் நாம் ஆராயும் மனிதர்களின் விதிகள் மற்றும் நடத்தையை மானுடவியல் பின்பற்றுகிறது. சமூக ஊடகங்களின் பரிணாம மாற்றத்தைப் பொறுத்து எங்கள் விதிமுறைகளும், அணுகுமுறைகளும் தொடர்ந்து மாறும், மேலும் வெவ்வேறு சமூகங்களின் வேறுபட்ட பயன்பாட்டு முறைகளையும் பிரதிபலிக்கும்.