XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

மானுடவியல் மற்றும் இன அமைப்பியல்

மானுடவியல் என்றால் என்ன?

மானுடவியல் என்பது மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றி அறிய மனித சமூகங்களின் ஒரு ஒப்பீட்டு ஆய்வு.

மற்ற துறைகளில், உதாரணமாக சமூகவியலை எடுத்துக் கொண்டால், மக்களிடம் அவர்களைப் பற்றியே பேட்டிகள், ஒருமுக குழுக்கள் மற்றும் ஆய்வுகள் வழியாக கேட்க முற்படுகின்றன‌. ஆனால் மானுடவியல் அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் வாழ்கிறார்கள் என பெரும்பாலோனாரால் சொல்ல முடியாது என்பதை அறிவுறுத்துகிறது. ஒரு குழந்தையாக நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தைக்கு இணங்கி நடக்கிறோம். இது ஒருவனை, உதாரணத்திற்கு, 'பொதுவான' தென் இத்தாலியனாகவோ அல்லது 'பொதுவான' வடக்கு சிலியைச் சேர்ந்தவனாகவோ ஆக்குகிறது.

இந்த கலாச்சார வேறுபாடுகள் பற்றி விவரிப்பதற்காக‌, மானுடவியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட பிரஜைகளுக்கு நடுவே வெளியாளாக நுழைகிறார்கள்: ஆண்களை ஆராயும் பெண்கள், விவசாயிகளை ஆராயும் கல்வியாளர்கள்,, இத்தாலியர்களைப் ஆராயும் ஒரு ருமானியர். கலாச்சாரம் வழியாக கற்றுக் கொண்ட பழக்கவழக்கங்களை இயல்பானது என நாங்கள் கருதவில்லை, ஏனென்றால் நாங்கள் குடும்ப அமைப்பு போன்ற சமூக நடைமுறைகள் வெவ்வேறு சமூகங்களில் எவ்வாறு மாறுகின்றன என்பதை ஆராய்கிறோம்.

பழங்குடியினர் மட்டும் இல்லை

மானுடவியல் என்பது குறைந்த வளர்ச்சியடைந்த சமூகங்களை ஆய்வது மட்டுமல்ல, அது அனைத்து மானுடச் சமூகங்களைப் பற்றியும் ஒரு ஒப்பீட்டு ஆய்வு.

பச்சாதாபம்

பொதுவாக மானுடவியலாளர்கள் அவர்கள் ஆய்வு செய்யும் மக்களைப் பற்றி அறிய முற்படுகிறார்கள். நீங்கள் அவருடைய கருத்துக்களுக்கு ஒப்பாதவாறும், மற்றும் அவரும் உங்களது கருத்துக்கு ஒப்பாதவாறும் இருக்கும் ஒருவரைப் பற்றிக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒருவேளை இன்னமும் கூட இந்தக் கருத்துக்களை நீங்கள் விரும்பவில்லை என்றாலும், ஒருவர் ஏன் மற்றும் எவ்வாறு அப்படிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியுமா?

இன அமைப்பியல் மட்டும் இல்லை

இன அமைப்பியல் என்பது ஒரு வழிமுறை, முடிவு அல்ல‌. ஒப்பீடு, பொதுமைப்படுத்தல், மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலமே மிகவும் உள்ளூர் கண்டுபிடிப்புகளை மனிதத்தைப் பற்றி பொதுவான முடிவுகளுக்கு வருவதற்குப் பயன் படுத்தலாம்

மானுடவியலாளர்கள் என்ன செய்கிறார்கள என்பதை சிறப்பாக புரிந்து கொள்ள "மானுடவியல் ஒரு அறிமுகம்" என்ற புத்தகத்தை பார்க்கவும்.

ethnography-infographic

இன அமைப்பியல் என்றால் என்ன?

முழுமையான சூழல்கள்

எவரும், சமூக ஊடகத்தில் மட்டுமோ, அரசியலில் ஈடுபட்டு மட்டுமோ, தாயாக மட்டுமோ, ஒரு ஹிந்துவாக மட்டுமோ, ஒரு மாணவனாக மட்டுமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தினனாக மட்டுமோ இருப்பதில்லை. மக்கள் ஒரே நேரத்தில் பல்வேறு அடையாளங்களை கொண்டுள்ளனர், எனவே நாம் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு அம்சத்தை ஆராய வேண்டுமானால், அவரது எல்லா வகையான அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

பங்கேற்பாளர் கூர் நோக்கு

மானுடவியலாளர்கள் மக்களிடம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என கேட்க மாட்டார்கள், அவர்கள் மக்களின் வாழ்க்கை முறைகளை நேரடியாக கவனித்து அதில் பங்கு கொள்கின்றனர்.. எடுத்துக்காட்டாக அவர்களுடன் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்வது, ஒரு குழந்தை பாதுகாப்பு மையத்தில் பணிபுரிவது, அல்லது உள்ளூர் கடைகளில் வேலை செய்வது போன்றன‌. 

ஒவ்வொரு ஆய்வு களத்திலும் நாங்கள் ஏன் 15 மாதங்கள் செலவழித்தோம்?

1. மக்கள் வாழ்வில் முடிந்த அளவு அம்சங்களை கூர் நோக்குவது, வழக்கமான நடத்தை வரம்பைப் பற்றிய உணர்வுடன் கூடியவரை திரும்பச் செய்தல். 

2. வயது, வகுப்புகள், பாலினம், மற்றும் பிற வேறுபாடுகளால் மாறுபட்ட பல்வகை மக்களை அறிந்து கொள்ளுதல் 

3. நமது சாட்சிகள், பொது நடத்தைகள் மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் உரையாடல் போன்ற தனி நடத்தைகளையும் கொண்டிருக்கும் வகையில் மக்களை அறிவதும், அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும். 

பொதுமைப்படுத்தல்

ஒவ்வொரு இடத்திலுள்ள ஒவ்வொரு நபரும் தனித்தன்மை வாய்ந்தவர் என நாங்கள் கண்டறிந்தோம், ஆண் பெண்ணில் இருந்து வேறுபட்டவர் மேலும் முதியவர்கள் இளைஞர்களை விட வேறுபட்டவர். நாம் கதைகளையும், பொதுமைப்படுத்தலையும் சமன் செய்ய‌ முயற்சிக்கிறோம், ஆனால் இது எப்போதும் அந்த தனித்தன்மையுடன் சமரசமாகவே இருக்கிறது. எனவே இந்த இணையதளத்தில், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பொதுத்தன்மையுடன் இருப்பதாகவேக் கூறப்படுகிறது, ஆனால் இந்த இடங்களின் தனிப்பட்ட நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆய்வுக்களத்திலிருந்து வரும் கருத்துக்களால் பின் தொடரப் படுகிறது.