
எலிஸபெட்டா கோஸ்டா
எலிஸபெட்டா கோஸ்டா ஆன்கராவில் உள்ள பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட்டின் (BIAA) ரிசர்ச் ஃபெல்லோக்களில் ஒருவர். துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மின்னணு ஊடகம், சமூக ஊடகம், இதழியல், அரசியல் மற்றும் பாலினம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மானுடவியலாளர்.

நீல் ஹெயின்ஸ்
நீல் ஹெயின்ஸ் சாண்டியகோவில் உள்ள பான்டிஃபிஷியா யுனிவர்சிடாட் கடோலிகா டி சிலியில் முனைவர் மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவர் . அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 2013 இல் தமது மானுடவியல் பிஹெச்டி பட்டத்தை பெற்றார். இவரது ஆய்வுகள் செயல்திறன், நம்பகத்தன்மை, உலகமயமாக்கல், பொலிவியா மற்றும் சிலியின் பால் மற்றும் இனம் சார்ந்த அடையாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

டாம் மெக்டொனால்ட்
டாம் மெக்டொனால்ட் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் இணை பேராசிரியர் ஆவார். தனது மானுடவியல் பிஹெடி பட்டத்தை யுசிஎல்லிடமிருந்து 2013 இல் பெற்றார் மேலும் சீனாவின் இணைய பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் கொள்கைகள் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

பேராசிரியரான டேனியல்மில்லர்
யுசிஎல்லின் மானுடவியல் பேராசிரியரான டேனியல்மில்லர் 'Tales from Facebook', 'Digital Anthropology' (ed. with H. Horst), 'The Internet: an Ethnographic Approach' (with D. Slater), 'Webcam' (with J. Sinanan), 'The Comfort of Things', 'A Theory of Shopping', and 'Stuff' உள்ளிட்ட 37 புத்தகங்களின் ஆசிரியர் மற்றும் எடிட்டர் ஆவார்.

ராஸ்வான் நிக்கோலக்ஸ்
ராஸ்வான் நிக்கோலக்ஸ் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இணை ஆராய்ச்சியாளர். இவர் இங்கு 2013 ஆம் ஆண்டு தனது பிஹெச்டி பட்டத்தை பெற்றார். தொலை தொடர்பியல் மற்றும் மானுடவியல் ஆகிய இரு துறைகளிலும் பயிற்சி பெற்ற இவர், ருமானியா மற்றும் இத்தாலியில் இன அமைப்பியல் ஆராய்ச்சிகளை செய்துள்ளார். மின்னணு மானிடவியல், அரசியல் பொருளாதாரம், ஆட்சி முறை, மற்றும் முறைப்படியின்மை; உணர்ச்சி, உள்ளுணர்வு, இயல்பாக்கம் ஆகியவை இவரது ஆராய்ச்சி விருப்பங்கள்.

ஜோலினா சின்னன்னன்
ஜோலினா சின்னன்னன் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப கழக நிறுவனத்தில் (RMIT யில்) துணை வேந்தரின் முனைவர் மேற்படிப்பு ஆராய்ச்சியில் சக மாணவராக உள்ளார். 2011இல் இருந்து 2014 வரை, அவர் யுசிஎல்லின் சக மானுடவியல் ஆராய்ச்சியாளராக இருந்தார். 'வெப்கேம்' (டி மில்லர்) என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆகவும் இருந்தார். டிரினிடாட், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் மின்னணு இன அமைப்பியல், புதிய ஊடகங்கள், இடம்பெயர்வு மற்றும் பாலினம் ஆகியவை அவரது ஆராய்ச்சிப் பகுதிகள்.

ஜூலியானோ ஸ்பையர்
ஜூலியானோ ஸ்பையர் யூசிஎல்லின் மானுடவியல் துறையில் பிஹெச்டி பயின்று வருகிறார். மேலும் இவர் தனது எம்.எஸ்சியை யூசிஎல்லின் மின்னணு மானுடவியல் செயல்முறைத் திட்டம் மூலம் பெற்றார். பிரேசிலில் சமூக ஊடகம் பற்றி தனது முதல் புத்தகமான 'கனெக்டாடோ' (ஜஹர், 2007) எழுதியுள்ளார், மேலும் 2010 இல் ஜனாதிபதி வேட்பாளரான மெரினா சில்வாவின் டிஜிட்டல் ஆலோசகராக இருந்தார். முதலில் அவர் ஒரு வாய்மொழி வரலாற்று ஆய்வாளராக பயிற்சி பெற்றிருந்தார்.

ஸ்ரீராம் வெங்கட்ராமன்
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் மானுடவியல் துறையில், ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஒரு பிஹெச்டி மாணவர். இவர் யூசிஎல்லில் தன்னுடைய ஆய்வுபட்ட ஆராய்ச்சிக்கு முன் ஒரு பயிற்சிபெற்ற தொழில்முறை புள்ளியியலாளர் மற்றும் அமெரிக்காவில் வால்மார்ட்டின் தலைமை பதவிகளை வகித்துள்ளார். வேலையிட தொழில்நுட்பங்கள், நிறுவன கலாச்சாரம், மற்றும் தொழில் முனைதல் ஆகியவை அவரது ஆராய்ச்சி விருப்பங்கள்.

சின்யான் வாங்
சின்யான் வாங் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மானுடவியல் துறையில் பிஹெச்டி பயின்று வருகிறார். தனது எம்.எஸ்சி பட்டத்தை யூசிஎல்லின் மின்னணு மானுடவியல் திட்ட படிப்பு மூலம் பெற்றுள்ளார். மேலும் இவர் சீன பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் கையெழுத்துக்கலையில் தேர்ந்தவர். மேலும் 'மின்னணு மானிடவியல்' (தொகுத்தவர் ஹார்ஸ்ட் மற்றும் மில்லர்) என்ற புத்தகத்தினை சீன மொழியில் மொழிபெயர்த்து சீனாவுக்கான மின்னணு மானிடவியலுக்காக தனது பங்களிப்பை செய்துள்ளார்.

Sorry, this Silva Document is not viewable.

Sorry, this Silva Document is not viewable.