இதை நாங்கள் எப்படி செய்தோம்
ஏன் இந்த இடங்கள்?
நாங்கள் மானுடவியலாளர்களாக உள்ளதால், சிறிய ஆய்வு களங்களில் எங்களது நீண்ட கால ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது அந்த களத்தின் ஆழம் மற்றும் அகலத்தை ஆராய வேண்டும். நாம் பொதுவாக உலகளாவிய அணுகுமுறை நோக்கிலேயே அணுகுகிறோம், ஆனால் நமது ஆய்வு களங்களின் தேர்வு, நமது குழுவின் நிபுணத்துவத்தையேப் பொறுத்திருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் தத்தமது ஆய்வு களங்களில் 15 மாதங்கள் தங்கியிருந்து, ஒவ்வொருவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்து களஆய்வு குறிப்புகளை ஒப்பீடு செய்து கொண்டோம். எங்கள் திட்டம் பற்றிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதே கருத்துக்களை மையமாக கொண்ட தலைப்பில் ஆராய்ச்சி செய்யக்கூடிய இந்த ஒப்பீட்டு அணுகுமுறை ஆகும். எனவேதான் ஆராய்ச்சி பற்றிய எங்கள் புத்தகங்கள் அனைத்தும் ஒரே அத்தியாய தலைப்புகளைக் கொண்டும், ஆனாலும் கண்டுபிடிப்புகள் அபூர்வமாக மாறுபட்டும் இருக்கின்றன.
ஆய்வுக்கான நெறிகள
மக்களின் உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை மூலமாக சமூக ஊடகங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் சில அந்தரங்கமான விஷயங்களை அடிக்கடி விவாதிக்க வேண்டி நேரலாம். நம்முடைய ஆய்வில் பங்கு பெறுபவர்களின் அடையாளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நாம் தனி நபர்களை அநாமதேயமானவர்கள் ஆக்குகிறோம் மேலும் அவர்கள் மாறுபட்டு இணக்கம் தெரிவிக்காத வரையில், திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் முதலியவற்றில் இடம் பெறும்போது, அதன் பொருளடக்கங்கள் அவர்களுடன் எந்த வகையிலும் சம்பந்தப்பட முடியாது என உறுதி செய்கிறோம். இரண்டு பெரிய நகரங்கள் தவிர, நாம் நமது ஆய்வுக் களங்களுக்குப் புனைப்பெயரையேப் பயன்படுத்தி இருக்கிறோம்.
ஆய்வு கணக்கெடுப்புகள்
களப்பணியை தொடங்கும் போதும் அதை முடிக்கும் தருவாயிலும் ஒவ்வொரு ஆய்வு களத்திலும் சுமார் 100 பேர்களிடம் குறுகிய ஆய்வுகள் மேற்கொண்டோம், மற்றும் சில சமயங்களில் பெரிய ஆய்வுகளையும் மேற்கொண்டோம் உதாரணத்திற்கு நமது இங்கிலாந்து ஆய்வுகளத்தில் 2,496 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட ஆய்வு. சில முடிவுகளை கீழ்க்கண்ட தகவல் தரவு படங்கள் போன்று " உலகம் சமூக ஊடகங்களை எவ்வாறு மாற்றியது" என்ற புத்தகத்தில் காணலாம்.